சொகுசு கப்பல் சுற்றுலா; 2 நாள் ஆழ்கடல் பயணம்; அமைச்சர் மதிவேந்தன் அறிவிப்பு

Minister Mathiventhan says luxury ship tourism in Tamilnadu starts soon: சென்னையில் இருந்து ஜூன் மாதம் சொகுசு கப்பல் மூலம் ஆழ்கடல் பகுதிக்கு சென்று திரும்பும் வகையில் சுற்றுலா திட்டம் தொடங்கப்படும் என அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் சுற்றுலாத்துறை மேம்படுத்த, அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தின்போது அமைச்சர் மதிவேந்தன் விளக்கமளித்தார்.

இந்தநிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், “தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலாத் தளங்களுக்கு பல்வேறு ஏஜென்சிகள் சுற்றுலா பயணிகளை அழைத்து சென்று வருகின்றனர். இதை முறைப்படுத்த அரசு திட்டமிட்டு வருகிறது. ஏனென்றால் மலைகள், சுற்றுலாத் தளங்களில் பாதுகாப்பற்ற முறையிலும், எவ்விதமான விதிமுறைகளும் கடைபிடிக்காமல் தங்குகின்றனர். சாகச சுற்றுலா என்றால் ட்ரக்கிங், பாராசூட் போன்ற சாகச பயணங்களை செய்வதற்கு சுற்றுலா பயணிகள் விரும்புகின்றனர். இதைப் பயன்படுத்தி போலியான ஏஜென்சிகள் சுற்றுலா பயணிகளை ஏமாற்றுகின்றனர். எனவே, இதை முறைப்படுத்தவும், சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையிலும், புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது. இது விரைவில் வெளியிடப்படும். முறையாக பதிவு செய்துள்ள ஏஜென்சிகளை சுற்றுலா பயணிகள் எளிதாக தெரிந்து கொள்ளும் வகையில் இணையதளத்தில் வெளியிடவும் சுற்றுலா துறை திட்டமிட்டுள்ளது” என்று கூறினார்.

இதையும் படியுங்கள்: நடராஜன் ஏற்பாட்டில் அமைந்த முள்ளிவாய்க்கால் முற்றம்: முதல் முறையாக சசிகலா விசிட்; படங்கள்

மேலும், “ஆழ்கடல் சொகுசு கப்பல் சுற்றுலா பயணத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளார். ஜூன் மாதத்தில், சென்னை துறைமுகத்திலிருந்து சொகுசு கப்பல் ஆழ்கடல் பகுதிக்கு சென்று மீண்டும் துறைமுகம் திரும்பும் வகையில் 2 நாள் சுற்றுலா திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

விசாகப்பட்டினத்திலிருந்து சென்னை வழியாக புதுச்சேரி செல்லும் சொகுசு கப்பல் பயணத்திட்டமும் தொடங்கப்படவுள்ளது. தனியார் சொகுசு கப்பல் மூலம் நடைபெறவுள்ள சுற்றுலா திட்டத்திற்கு சுற்றுலாத்துறை ஒத்துழைப்பு வழங்கும்.” என்றும் அமைச்சர் மதிவேந்தன் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.