சென்னை:
கார்த்தி சிதம்பரத்தின் மீதான புதிய வழக்கின் கீழ் இன்று சி.பி.ஐ. அதிகாரிகள் 10 இடங்களில் சோதனை நடத்துவது பற்றி முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் விளக்கம் அளித்து டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-
சென்னையில் உள்ள எனது வீட்டில் சி.பி.ஐ. சோதனை நடத்தி உள்ளனர். டெல்லியில் உள்ள எனது அலுவலக வீட்டிலும் சி.பி.ஐ. குழுவினர் சோதனை நடத்தி வருகிறார்கள்.
காலை முதல் நடந்து வரும் சோதனையில் அவர்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை. அவர்களால் எதையும் கண்டுப்பிடிக்க முடியவில்லை.
சி.பி.ஐ. தரப்பில் என்னிடம் காண்பிக்கப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் (எப்.ஐ. ஆர்) எனது பெயர் குற்றவாளி என்று குறிப்பிடப்படவில்லை. சி.பி.ஐ. சோதனை நடத்தி வரும் இந்த தருணம் சுவாரஸ்யமானது.