ஜூன் 3 முதல் சென்னையில் மலர் கண்காட்சி – முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

சென்னை:
ஜூன் 3ல் சென்னையில் மலர் கண்காட்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

தமிழகத்தில் ஐந்து முறை முதல்வராகவும், 13 முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும் பதவி வகித்தவர் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி. இவரது பிறந்த நாள் வருகிற ஜூன் மூன்றாம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் , இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் என சட்டப்பேரவையில் சமீபத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். அத்துடன் சென்னை அண்ணா சாலையில் உள்ள ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் கருணாநிதிக்கு சிலை நிறுவப்படும் என்றும் அண்ணா, பெரியார் சிலைகளுக்கு நடுவே கருணாநிதி சிலை அமைக்கப்படும் என்றும் இதன் திறப்பு விழா ஜூன் மூன்றாம் தேதி நடைபெறும் என்றும் அறிவித்துள்ளார்.

இந்நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் கருணாநிதி பிறந்தநாளான ஜூன் 3-ந்தே தி முதல் ஜூன் 5-ந்தே தி வரை 3 நாட்கள் நடைபெற உள்ள இந்த மலர் கண்காட்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.