நீதிமன்ற உத்தரவின்படி ஜெய்பீம் படக்குழுவினர் மீது வேளச்சேரி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சாதி மதக்கலவரத்தை தூண்டும் வகையில் ஜெய்பீம் படம் எடுக்கப்பட்டதாகக்கூறி சைதாபேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தயாரிப்பாளர்கள் சூர்யா, ஜோதிகா மற்றும் இயக்குனர் ஞானவேல், உட்பட படக்குழுவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கபட்டிருந்தது.
இதன் விசாரணையில், மே 20ஆம் தேதிக்குள் ஜெய்பீம் படக்குழுவினர் மீது வழக்குப்பதிவு செய்து முதல் தகவல் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என வேளச்சேரி போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது. இதன்படி, சாதி, மத ரீதியான நம்பிக்கையை இழிவுபடுத்துவது என்ற சட்டப்பிரிவின் கீழ் படக்குழு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.