லக்னோ :
உத்தர பிரதேசம் வாரணாசியில் உள்ள புகழ்பெற்ற இந்து மதவழிபாட்டு தலமான காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகில் உள்ள இஸ்லாமிய மதவழிபாட்டு தலமான ஞானவாபி மசூதி வளாகத்தின் சுவரில் உள்ள இந்து மத கடவுளான சிங்கார கவுரி அம்மனை ஆண்டு முழுவதும் வழிபட அனுமதிக்க வேண்டும் என இந்து மதத்தைச் சேர்ந்த பெண்கள் 5 பேர் வாரணாசி ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த வாரணாசி ஐகோர்ட், ஞானவாபி மசூதி வளாகத்தில் வீடியோ பதிவுடன் கள ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
இதையடுத்து, கடந்த 3 நாளாக மசூதி வளாகத்தில் வீடியோ ஆய்வு பணிகள் நடைபெற்றது. இந்த ஆய்வுப்பணியின் போது இஸ்லாமிய மத வழிபாட்டு தலமான மசூதியில் இந்து மத கடவுளான சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் ஞானவாபி மசூதி பகுதி முழுவதும் சீல் வைக்கப்பட்டது. அப்பகுதிக்குள் ஆட்கள் நுழைய தடைவிதித்து ஐகோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில், ஞானவாபி மசூதியில் ஆய்வு செய்யப்பட்ட ஐகோர்ட் அமைத்த குழுவின் கமிஷனராக இருந்த வழக்கறிஞர் அஜய் மிஸ்ராவை நீக்கி நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
மசூதியில் ஆய்வுசெய்த விவரங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன் மீடியாக்களில் கசிந்ததை அடுத்து அவரை நீக்கி வாரணாசி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
இதையும் படியுங்கள்…நூல் விலை உயர்வு- மத்திய அமைச்சருடன் தமிழக எம்.பி.க்கள் நாளை சந்திப்பு