மும்பை,
ஐபிஎல் கிரிக்கெட்டில் மும்பை – ஐதராபாத் அணிகளுக்கு இடையேயான லீக் ஆட்டம் இன்று மும்பையில் நடைபெற்றது.
இப்போட்டியில், ஐதராபாத் அணியின் பேட்டிங்கில் கடைசி ஓவரை வீசிய மும்பை வீரர் ஜஸ்பிரித் பும்ரா ஓவரின் கடைசி பந்தில் வாஷிங்டன் சுந்தர் விக்கெட்டை வீழ்த்தினார். இதன் மூலம் டி20 போட்டியில் 250 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை பும்ரா பெற்றார்.
இவருக்கு அடுத்தபடியாக இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் வரிசையில் 223 விக்கெட்டுகளை வீழ்த்தி புவனேஷ்வர் குமார் 2-வது இடத்தில் உள்ளார்.
அதேவேளை டி20 போட்டிகளில் 250 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் இதுவரை சுழற்பந்து வீச்சாளர்கள் மட்டுமே இடம்பெற்றிருந்தனர். அதன்படி, அஷ்வின் (274 விக்கெட்), சாஹல் (271 விக்கெட்), புயூஷ் சாவ்லா (270 விக்கெட்), அமித் மிஷ்ரா (262 விக்கெட்) ஆகிய சுழற்பந்து வீச்சாளர்கள் டி20-யில் 250-க்கும் அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.