புதுடெல்லி:
டெல்லியில் தொழில் நகரமான நரேலா பகுதியில் உள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலை ஒன்றில் கடந்த சனிக்கிழமை இரவு தீ விபத்து ஏற்பட்டது.
தகவல் அறிந்தவுடன் 25 தீயணைப்பு வீரர்கள் குறிப்பிட்ட பகுதிக்கு விரைந்து சென்று தீயிணை அணைத்தனர். மேலும், இந்த விபத்தில் எந்தவொரு உயிர் சேதமும் ஏற்படவில்லை.
இந்நிலையில், நேற்று அதே பகுதியில் உள்ள காலணி தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 9 தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்திலும் இதுவரை எந்த உயிரிழப்பும் பதிவு செய்யப்படவில்லை என்று டெல்லி தீயணைப்பு வீரர்கள் கூறினர்.
இந்த விபத்தானது கடந்த இரண்டு நாட்களில் டெல்லி, நரேலா பகுதியில் ஏற்பட்ட இரண்டாவது தீ விபத்து ஆகும்.