நாமக்கல்லில், பெற்றோர் அடிக்கடி சண்டையிட்டு வந்ததால் ஏற்பட்ட மன அழுத்தத்தில் 12ம் வகுப்பு மாணவன் கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாரைக்கிணறு பகுதியைச் சேர்ந்த ரவி – மேகலா தம்பதியின் மகன் தருண், 12ம் வகுப்பு படித்து வந்தார்.
மதுபோதைக்கு அடிமையான தருணின் தந்தை ரவி, அடிக்கடி வீட்டில் தகராறு செய்து வந்ததாகவும் இதனால் கணவனை பிரிந்த மேகலா, தருணுடன் சிங்களாந்தபுரத்தில் உள்ள தாய் வீட்டில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.
அந்த இடத்திற்கும் சென்று அடிக்கடி ரவி சண்டையிட்டு வந்ததாக சொல்லப்படுகிறது.
இதனால் மன அழுத்தத்தில் இருந்த தருண், நேற்றிரவு வீட்டிற்கு வெளியே இருந்த மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டதாக கூறப்படுகிறது.
மாணவன் தருண் எழுதியதாக கூறப்படும் 4 பக்க கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.