12ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியிடம் அத்துமீறி தவறாக நடக்க முயன்ற மளிகை கடை வியாபாரியை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் விளாப்பாக்கம் பகுதியில் பாண்டுரங்கன் என்பவர் வசித்துவருகிறார். இவர் மளிகை கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இந்தநிலையில் பாண்டுரங்கன், அந்த வழியாக வந்த பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியிடம் அத்துமீறி தவறாக நடக்க முயற்சி செய்துள்ளார்.
இதனையடுத்து அந்த மாணவி ராணிப்பேட்டை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.