சென்னையில், 3 மாதங்களுக்கு முன் தன்னை கத்தியால் வெட்டிய மாணவனை, 12-ம் வகுப்பு பொதுதேர்வு எழுத வந்த போது, பதிலுக்கு கத்தியால் வெட்டிய இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.
ராயப்பேட்டையை சேர்ந்த கார்த்திக் என்பவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவனை கிண்டலடித்து, தாக்கி வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அந்த சிறுவன் கடந்த மார்ச் மாதம் கார்த்திக்கின் பின்னந்தலையில் கத்தியால் வெட்டி விட்டு தப்பி ஓடினான்.
போலீசாரால் கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்ட அந்த சிறுவனை +2 பொதுதேர்வு எழுதுவதற்காக பெற்றோர் பரோலில் அழைத்து வந்துள்ளனர். அப்போது கார்த்திக் சிறுவனை கத்தியால் வெட்டி விட்டு தப்பி ஓடினான்.
படுகாயமடைந்த சிறுவன் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான்.