தமிழகத்தில் பாஜக காலூன்ற வேகமாக செயல்படுகிறது என்றும், தமிழகத்தில் குஜராத் மாடலை அனுமதிக்காதீர்கள் எனவும் குஜராத் சட்டப்பேரவை உறுப்பினர் ஜிக்னேஷ் மேவானி தெரிவித்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் கட்சியின் பட்டியலினத்தவர் பிரிவின் சார்பாக எழுதப்பட்டுள்ள ‘தலித் உண்மைகள்’ என்ற புத்தகத்தை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டார். வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, காங்கிரஸ் சட்டப்பேரவை குழு தலைவர் செல்வப்பெருந்தகை, குஜராத் சட்டப்பேரவை உறுப்பினர் ஜிக்னேஷ் மேவானி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது நிகழ்ச்சியில் பேசிய குஜராத் எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி, “சாதி மிகவும் கடினமான ஒன்று. சமுதாயத்தில் இருக்கும் ஒவ்வொரு படிநிலையும் அழிக்கும் ஒன்று. பிஜேபி மற்றும் ஆர்.எஸ். எஸ் இயக்கம் முழு சர்வாதிகார இயக்கம். தலித் மக்களை காப்பதற்கு நாம் அனைத்தையும் செய்ய வேண்டும். இது நமக்கு ஒரு சவால். தலித் இயக்கம் பல விதங்களில் போராட்டத்தை முன்னெடுத்து உள்ளனர். அவர்களின் இயக்கம் மிகவும் முக்கியமான ஒன்று.
ஒரு தலித் இல்லாத சாதியினர் தீண்டாமையை பின்பற்றும் போது அவர்களின் கஷ்டம் தெரியும். மதம் மற்றும் சாதி ஒன்றிணைந்த ஒன்று. அதை எதிர்க்க வேண்டும். தமிழகத்தில் பாஜக வர வேலை முயற்சி செய்கிறார்கள். அவர்களை வர விடாதீர்கள், குஜராத் மாடலை ஏற்றுக்கொள்ளாதீர்கள். அதன் கொடுமை தங்களுக்கு நன்றாக தெரியும். ஆகையால் தமிழகத்திற்கு சாவர்கார் தேவையில்லை, பெரியாரை கொண்டாடுங்கள்” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM