புதுடில்லி : ‘பெரிய அளவில் கடன் வாங்கி மோசடி செய்த திமிங்கலங்களை விட்டுவிடுவீர்கள். ஆனால், கடனை செலுத்த முன்வந்த சிறு விவசாயிகளை நசுக்குவீர்களா’ என, வங்கிக் கடன் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் கடுமையுடன் குறிப்பிட்டது.
மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தைச் சேர்ந்த மோகன்லால் படிதார் என்ற விவசாயி, பாங்க் ஆப் மஹாராஷ்டிராவில் கடன் பெற்றிருந்தார். ஒருமுறை சமரச திட்டத்தில் கடனை செலுத்த தயாராக இருந்தார். அதன்படி, 36.50 லட்சம் ரூபாய் செலுத்த வங்கி உத்தரவிட்டது. அதில், 35 லட்சம் ரூபாயை அவர் செலுத்தினார். இதற்கிடையே, மொத்தக் கடனான, 50.50 லட்சம் ரூபாயையும் செலுத்தும்படி அவருக்கு வங்கி உத்தரவிட்டது.
இதை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் அவருக்கு சாதகமாக மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. அதை எதிர்த்து, வங்கி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.அதை விசாரித்த நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட், சூர்ய காந்த் அடங்கிய அமர்வு தன் உத்தரவில் கூறியுள்ளதாவது: தான் வாங்கிய கடனை நேர்மையுடன் செலுத்த இந்த விவசாயி முன்வந்தார். வங்கியுடன் செய்த சமரச ஒப்பந்தத்தில், 95 சதவீதத்தை அவர் செலுத்தியுள்ளார். ஆனால், கூடுதல் தொகை செலுத்தும்படி அவருக்கு நெருக்கடி தரப்பட்டுள்ளது.பெரிய அளவில் கடன்களை வாங்கி ஏமாற்றிய திமிலங்கலங்களை விட்டுவிடுவீர்கள். ஆனால், இவரைப் போன்ற சிறு விவசாயிகளை நசுக்குவீர்களா?இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. அதே நேரத்தில் இதில் எழுப்பப்பட்டுள்ள சட்டம் தொடர்பான கேள்விகள், உரிய வழக்குகளுடன் இணைத்து விசாரிக்கப்படும்.
இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.
புதுடில்லி : ‘பெரிய அளவில் கடன் வாங்கி மோசடி செய்த திமிங்கலங்களை விட்டுவிடுவீர்கள். ஆனால், கடனை செலுத்த முன்வந்த சிறு விவசாயிகளை நசுக்குவீர்களா’ என, வங்கிக் கடன் தொடர்பான வழக்கில்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.