இலங்கையின் திரிகோணமலை கடற்படை முகாமில் இருந்து மகிந்த ராஜபக்சே வெளியேறியதாக தகவல் வெளியாகி உள்ளது.
அந்நாட்டு மக்கள் தொடர்ந்து நடத்திய போராட்டத்தை அடுத்து, பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே விலகினார்.
அதனை அடுத்து, அவரது குடும்பத்தினர் ஹெலிகாப்டரில் தப்பியோடுவது போல் காட்சிகளும் வெளியாகியிருந்தன.
இந்த நிலையில் திரிகோணமலை கடற்படை முகாமில் தங்கியிருந்த அவர், அங்கிருந்து வெளியேறி கொழும்பு அருகே தங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
முன்னாள் பிரதமர் என்ற வகையில் மகிந்தாவிற்கு பாதுகாப்பு வழங்க வேண்டியது அவசியமானது என்றும், இதனால் அவர் கடற்படை முகாமில் தங்க வைக்கப்பட்டதாகவும் பாதுகாப்பு அமைச்சக செயலாளரான கமல் குணரத்ன ஏற்கனவே தெரிவித்திருந்தார்.