திருமண ஊர்வலத்தில் குடிபோதையில் நடனமாடிய மணமகன்! க்ளைமேக்ஸில் மணமகள் வைத்த ட்விஸ்ட்!

ராஜஸ்தானில் திருமண ஊர்வலத்தில் குடிபோதையில் மணமகன் நடனமாடி முகூர்த்ததிற்கு தாமதமானதால், விரக்தியில் வேறு ஒருவரை மணமகள் கரம்பிடித்தார்.
ராஜஸ்தானின் சுரு மாவட்டத்தில் சுனில் என்ற இளைஞருக்கு திருமணம் நடைபெற இருந்தது. திருமணம் மணமகளது ராஜ்கர் தாலுகாவின் செலானா கிராமத்தில் நடைபெறுவதாக இருந்ததால், மணமகன் உறவினர்கள் மணமகளின் கிராமத்திற்கு வந்தனர். மணமகனை வரவேற்பதற்காக இசை வாத்தியங்களுடன் மணமகள் வீட்டிற்கு ஊர்வலமாகச் செல்ல திட்டமிடப்பட்டு இருந்தது.
Groom parties till late during 'baarat', disgruntled bride marries another  man - Samakalika Malayalam
ஆனால் மணமகனும் அவரது நண்பர்களும் குடித்துவிட்டு டிஜேயின் இசைக்கு நடனமாடத் தொடங்கினர். இதனால் ஊர்வலம் பல மணி நேரம் தாமதமானது. திருமண விழாக்கள் தொடங்குவதற்கான நல்ல நேரம் அதிகாலை 1.15 மணியாக திட்டமிடப்பட்ட நிலையில் ஊர்வலம் மணமகள் இல்லம் வந்துசேரவில்லை. ஊர்மக்கள் மத்தியில் மணமகன் குடிபோதையில் நடனமாடியதால் மணமகனை திருமணம் செய்ய மறுத்துள்ளார்.
Groom parties till late during 'baarat', disgruntled bride marries another  man - India News
விரக்தியடைந்த மணப்பெண் ஊர்வலத்தை திருப்பி அனுப்ப முடிவு செய்தார். இதையடுத்து அவரது குடும்பத்தினர் மணமகளை வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைத்தனர். மணமகனின் குடும்பத்தினர் ராஜ்கர் காவல் நிலையத்திற்கு மணமகளின் குடும்பத்தினர் மீது புகார் அளிக்க ராஜ்கர் காவல்துறையை அணுகினர்.

மணமகனும் அவரது குடும்பத்தினரும் திருமண விழாக்களில் கவனக்குறைவாக இருப்பதாகவும், எதிர்காலத்திலும் இந்த அணுகுமுறை தொடரும் என்றும் மணமகள் தரப்பில் கூறப்பட்டது. இதற்கிடையில், காவல்துறையினருடன் கலந்தாலோசித்த பின்னர், இரு தரப்பினரும் திருமணம் ரத்து செய்யப்பட்டதற்கு குடும்பப் பிரச்சினையே காரணம் என்று முடிவு செய்து எழுத்துப்பூர்வமாக உறுதிப்படுத்தினர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.