பிரித்தானியாவின் பிளாக்பூல் எஃப்சி-யின் முன்கள எதிர்ப்பாட்ட வீரர் ஜேக் டேனியல்ஸ்(17) தன்னை தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில் ஓரினச் சேர்க்கை கால்பந்து வீரராக வெளிப்படுத்துயுள்ளார்.
பிரித்தானியாவின் பிரபலமான கால்பந்து அணியான பிளாக்பூல் எஃப்சி-யின்(Blackpool FC) முன்கள எதிர்ப்பாட்ட வீரர் ஜேக் டேனியல்ஸ்(17) தன்னை ஓரினச் சேர்க்கைராக sky news தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் வெளிப்படையாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஜேக் டேனியல்ஸ் அளித்த பேட்டியில், இந்த தருணத்திற்காக ஒவ்வொரு நாளும் தயாராகி வந்தாகவும், சரியான தருணத்திற்காக காத்து இருந்ததாகவும் ஆனால் தற்போது என் கதையை மக்களிடம் சொல்ல நான் தயாராக இருக்கிறேன் என தெரிவித்தார்.
நான் ஓரினச் சேர்க்கையாளன் என்ற எனது உண்மையான முகத்தை மக்கள் அறிய வேண்டும், ஏனென்றால் அவர்களிடம் நான் பொய்யாக இருக்க விரும்பவில்லை என தெரிவித்துள்ளார்.
தற்போது நடைப்பெற்ற கால்பந்து தொடரில் 30 கோல்கள் அடித்ததன் முலம் என்னை ஒரு கால்பந்து வீரராக அடையாளப்படுத்தி கொண்டேன் மற்றும் கால்பந்து அணியில் ஒன்றில் தொழில்முறை வீரராகவும் ஒப்பந்தமாகியுள்ளேன், அதேபோல என்னுடைய மற்றோரு அடையாளத்தையும் இந்த தருணத்தில் வெளிப்படுத்தியதன் முலம் சுகந்திரமாகவும், நம்பிக்கையுடனும் இருப்பதாக தெரிவித்தார்.
மேலும் எனது கால்பந்து அணி அனைத்து விதமான ஆதரவையும் தந்தாகவும், தற்போது நான் நானாக இருக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
1990ம் ஆண்டு தனது 29வது வயதில் பிரித்தானிய தொழில்முறை கால்பந்து விளையாட்டில் இருந்து வெளியேறிய ஜஸ்டின் ஃபஷானு-க்கு பிறகு தன்னை ஒரினச் சேர்க்கையாளராக வெளிப்படையாக அறிவிக்கும் முதல் பிரித்தானிய வீரர் ஜேக் டேனியல்ஸ்(17) ஆவார்.
கூடுதல் செய்திகளுக்கு: ரஷ்ய எல்லைக்கு அருகில்…தொடங்கியது நோட்டோவின் பிரம்மாண்ட போர் பயிற்சி!
ஜேக் டேனியல்ஸின் இந்த அறிவிப்பிற்கு முன், அவுஸ்திரேலியாவின் ஜோசுவா கேவல்லோ மட்டுமே தற்சமயத்தில் விளையாண்டு வரும் வெளிப்படையான ஓரின சேர்க்கையாளராக இருந்து வந்தார்.