நெல்லை அருகே கல்குவாரியில் பாறை உருண்ட விபத்தில், இடிபாடுகளில் சிக்கிய 5வது நபர் இருக்கும் இடம் கண்டறியப்பட்டதை தொடர்ந்து, அவரை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அடைமிதிப்பான்குளத்தில் நிகழ்ந்த விபத்தில், 2 பேர் உயிரிழந்த நிலையில், 2 பேர் மீட்கப்பட்டுள்ளனர். எஞ்சிய இருவரை மீட்கும் பணி 3ஆவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கவிழ்ந்திருக்கும் லாரிக்கு அடியில் சிக்கியிருக்கும் ஐந்தாவது நபரை மீட்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதனிடையே, கல்குவாரி குத்தகைதாரர் செல்வராஜ் மற்றும் அவரது மகனை பிடிக்க தனிப்படை போலீசார் கேரளா விரைந்துள்ளனர். மேலும், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 15 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.