டெல்லி: முன்னாள் ஒன்றிய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தொடர்புடைய இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ப.சிதம்பரத்தின் மகனும் சிவகங்கை எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் மீதான வழக்கு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 2010 – 14 ல் சீனர்கள் இந்தியா வருவதற்கு சட்டவிரோதமாக 260 விசாக்கள் வழங்கப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரோ 0 லட்சம் பெற்றுக் கொண்டு முறைகேடாக விசாக்கள் வழங்கியதாக கார்த்தி சிதம்பரம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக முன்னாள் ஒன்றிய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் தொடர்புடைய இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ப.சிதம்பரத்தின் மகனும் சிவகங்கை எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் மீதான வழக்கு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ப.சிதம்பரத்தின் வீட்டில் 6 பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகள் குழு சோதனை செய்து வருகிறது. டெல்லி, சென்னை, மும்பை உள்ளிட்ட 11 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றன. தமிழகத்தில் சென்னை, சிவகங்கையில் சோதனை நடைபெற்று வருவதாக கூரப்பப்டுகிறது. இன்று காலை 6 மணி முதலே சிபிஐ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள கார்த்தி சிதம்பரம்; சிபிஐ நடத்துவது எத்தனையாவது சோதனை; நான் எண்ண மறந்துவிட்டேன் என டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.