ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியை ஏற்றதன் பின்னர்இ விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டமை, மக்களின் நன்மைகளை கருத்திற் கொண்டே என அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அறிக்கையொன்றை அவர் விடுத்துள்ளார்
உடனடியாக எடுக்கப்பட வேண்டிய தீர்மானங்களை விரைவுபடுத்துவதற்காக இந்தக் குழுக்கள் அமைக்கப்பட்டதன் நோக்கமாகும். இதற்காக, அரசாங்கத்தின் எந்த நிதியும் செலவிடப்படவில்லை. இதனூடாக, மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணங்கள் அதிகரிக்கப்படும். இதன் பிரதிபலன்கள் குறுகிய காலத்தில் மக்களுக்கு கிடைக்கும் என அவர் தெரிவித்தார்.
இது எந்த வகையிலும், சவால்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் வேலைத்திட்டம் அல்ல. இது தொடர்பாக, சமூக ஊடகங்களின் ஊடாக பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்படுகின்றன. அவை அடிப்படை அற்ற குற்றச்சாட்டுக்கள் என பாலித்த ரங்கே பண்டார சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்தியாவசிய பொருட்களை குறைபாடின்றி வழங்குவது, மருந்து தட்டுப்பாட்டை நிவர்த்திப்பது, உரம் மற்றும் பெற்றோல் நெருக்கடிகளுக்கு தீர்வு காணுதல் போன்ற செயற்பாடுகள் இந்தக் குழுக்களுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுக்களின் அறிக்கை பிரதமருக்கு கையளிக்கப்பட்டுள்ளது என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.