முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து பேரறிவாளனை விடுவிக்க கோரிய வழக்கில் உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது. பேரறிவாளன் வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்குகிறது.
வழக்கில் பேரறிவாளன், தமிழக அரசு, மத்திய அரசு எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்திருந்தது. பேரறிவாளன் விடுவிக்கும் அதிகாரம் யாருக்கு என்பது தொடர்பாக வாதங்கள் நடைபெற்ற நிலையில் நாளை தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
அமைச்சரவை தீர்மானம் மீது ஆளுநர் ஆர்.என்.ரவி முடிவு எடுக்காதது பற்றி நீதிமன்றம் அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்.. டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு திட்டமிட்டபடி மே 21-ம் தேதி நடைபெறும்