கேரளாவில் சாலையில் பேருந்தை முந்திச்செல்ல முயன்ற ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் இடித்துத் தள்ளப்பட்டு, பேருந்தின் சக்கரம் அவர் மீது ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இடுக்கி மாவட்டத்திற்குட்பட்ட தொடுப்புழாவில் குறுகலான சாலையில் சிக்னலில் நின்று கொண்டிருந்த பேருந்து, புறப்பட்டு சென்ற சமயத்தில் அதனை ஓய்வு பெற்ற முன்னாள் காவல் உதவி ஆய்வாளர் சந்திரன் இருசக்கர வாகனத்தில் முந்திச்செல்ல முயன்றார்.
அப்போது பேருந்து இடித்துச்சென்றதில் அவர் கீழே விழுந்ததையடுத்து, பேருந்தின் பின்புற சக்கரங்கள் அவரது தலை மீது ஏறி இறங்கின. இதில் ஹெல்மெட் நொறுங்கி சந்திரன் தலை நசுங்கி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக கொண்டு தொடுப்புழா போலீசார் விசாரித்து வருகின்றனர்.