மதுரை மாவட்டம் சோழவந்தானில் மது அருந்தத் தடையாக இருந்த காவல்துறை அமைத்த சிசிடிவி கேமராவை உடைத்த 3 இளைஞர்கள் சிசிடிவி காட்சியால் கைது செய்யப்பட்டனர்.
சோழவந்தான் பகுதி முழுவதும் காவல்துறையினர் 48 சிசிடிவி கேமராக்கள் அமைத்து குற்ற செயல்களை கண்காணித்து வந்ததால் குற்றங்கள் குறைந்த வண்ணம் இருந்தன.
இந்நிலையில் 3இளைஞர்கள் தாங்கள் மது அருந்துவதற்கு இந்த சிசிடிவி கேமராக்கள் தடையாக இருப்பதால் மதுபோதையில் அதனை உடைத்துள்ளனர். இதுதொடர்பான புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அங்கிருந்த சிசிடிவி உதவியுடன் தொடர்புடைய 3பேரையும் பிடித்து கைது செய்தனர்.