மனைவியைக் கட்டாயப்படுத்தி பாலியல் உறவு கொண்டால் அது பாலியல் வன்கொடுமை என அறிவிக்கக்கோரி வழக்கில் இரு வேறுபட்ட தீர்ப்புகளை டெல்லி உயர்நீதிமன்றம் வழங்கியிருந்த நிலையில் அதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இந்திய தண்டனை சட்டம் 375 இன் கீழ் மனைவியின் விருப்பம் இல்லாமல் கணவன் அவருடன் பாலியல் ரீதியிலான உறவு கொண்டால் அதனை பாலியல் குற்றமாக அறிவிக்க வேண்டும் என ஏராளமான மனுக்கள் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் ராஜீவ் சக்தேர் மற்றும் ஹரி சங்கர் ஆகியோர் இரு வேறு விதமான தீர்ப்புகளை வழங்கி இருந்தார்கள்.
அதாவது நீதிபதி ராஜீவ், மனைவியை அவரது விருப்பம் இல்லாமல் கணவர் பாலியல் உறவு கொள்ளும் பொழுது அதை பாலியல் குற்றமாக அறிவிக்காமல் இருப்பது சட்டவிரோதம் என்றும் நீதிபதி ஹரிசங்கர் அதனை சரியானது என்றும் தீர்ப்பு வழங்கி இருந்தனர். இந்த இருவேறு தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனுதாரர்கள் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிக்கலாம்: திருவாரூர்: சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை – உறவினர் மீது போக்சோ வழக்குSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM