மரியுபோலின் அசோவ்ஸ்டல் இரும்பு ஆலையில் இருந்து மொத்தம் 264 காயமடைந்த உக்ரைனிய வீரர்கள் வெளியேற்றப்பட்டு இருப்பதாக அந்த நாட்டின் துணைப் பாதுகாப்பு அமைச்சர் ஹன்னா மாலியார் தெரிவித்துள்ளார்.
உக்ரைனின் முக்கிய துறைமுக நகரான மரியுபோலை ரஷ்ய படைகள் தங்களது முழு கட்டுப்பாட்டில் கொண்டுவந்து இருக்கும் நிலையில், அந்த நகரின் அசோவ்ஸ்டல் இரும்பு ஆலை மட்டும் உக்ரைனிய பாதுகாப்பு வீரர்கள் பதுங்கி இருந்து தாக்குதல் நடத்துவதால் ரஷ்ய படைகளால் கைப்பற்றப்படாமல் உள்ளது.
அந்த வகையில் இரும்பு ஆலையில் ரஷ்ய வீரர்களுக்கு எதிராக பலவாரங்களாக போராடி வரும் உக்ரைன் பாதுகாப்பு வீரர்களில் பலர் படுகாயமடைந்து உயிருக்கு போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
The first official information about Azovstal.
53 severely wounded servicemen were taken to the occupied Novoazovsk hospital
211 – taken to occupied Elenivka, where they will wait for an exchange pic.twitter.com/0jXe50wg4E
— ТРУХА⚡️English (@TpyxaNews) May 16, 2022
இந்தநிலையில் ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய இருநாடுகள் இடையே எட்டப்பட்ட புதிய ஒப்பந்தத்தின் அடிப்படையில், இரும்பு ஆலையில் காயமடைந்த உக்ரைன் பாதுகாப்பு வீரர்களை பேருந்துகளின் முலம் வெளியேற்றியுள்ளனர்.
இதில், படுகாயமடைந்த 54 உக்ரைன் பாதுகாப்பு வீரர்கள் ரஷ்ய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் நோவோசோவ்ஸ்க் நகர மருத்துவமனைக்கும், 211 உக்ரைன் பாதுகாப்பு வீரர்கள் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களின் பிடியில் இருக்கும் ஒலெனிவ்கா நகருக்கும் பேருந்து வாயிலாக கொண்டு செல்லப்பட்டு இருப்பதாக உக்ரைன் துணைப் பாதுகாப்பு அமைச்சர் ஹன்னா மாலியார் தெரிவித்துள்ளார்.
கூடுதல் செய்திகளுக்கு: நான் ஓரினச் சேர்க்கையாளன்…பிரபல பிரித்தானிய கால்பந்து அணியின் வீரர் அதிரடி அறிவிப்பு!
மேலும் இந்த வெளியேற்ற திட்டமானது, உக்ரைன் பாதுகாப்பு வீரர்களிடம் சிக்கிய ரஷ்ய வீரர்களை மாற்றி கொண்டதின் மூலம் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.