மாயமான லண்டன் பாடசாலை மாணவன்: பெற்றோருக்கு கிடைத்த அதிர்ச்சி தகவல்


தெற்கு லண்டனில் மாயமான பாடசாலை மாணவன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குடும்பத்தினரை மொத்தமாக உலுக்கியுள்ளது.

எல்தம் பகுதியில் புதன்கிழமை சுமார் 4 மணியளவில் பேருந்தில் இருந்து இறங்கியதாக கூறப்படும் மாணவன் ஜேமி டேனியல், அதன் பின்னர் குடியிருப்புக்கு திரும்பவில்லை என கூறப்படுகிறது.

இதனையடுத்து, பொலிசார் உதவியை நாடிய பெற்றோர் கவலையுடன் காத்திருந்துள்ளனர். அதே நாள் பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து மரங்கள் அடர்ந்த பகுதிக்கு விரைந்துள்ளனர்.

மாயமான லண்டன் பாடசாலை மாணவன்: பெற்றோருக்கு கிடைத்த அதிர்ச்சி தகவல்

பேச்சுமூச்சற்ற நிலையில் இளைஞர் ஒருவரை கண்டெடுத்துள்ளதாக பொலிசாருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சம்பவப்பகுதிக்கு விரைந்த பொலிசார், இளைஞர் ஒருவரை மீட்டுள்ளதுடன், அவர் மரணமடைந்துள்ளதை உறுதி செய்தனர்.

மேலும், 14 வயதான ஜேமி டேனியலின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து, அடையாளம் காணும் நடவடிக்கையும் முன்னெடுத்தனர்.
அவரது மரணம் தொடர்பில் தற்போது தகவல் ஏதும் வெளியிட முடியாது எனவும் பொலிசார் விசாரணையை தொடங்கியுள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.

மாயமான லண்டன் பாடசாலை மாணவன்: பெற்றோருக்கு கிடைத்த அதிர்ச்சி தகவல்

மே 12ம் திகதி பகல் சுமார் 10.50 மணியளவில் பொலிசாருக்கு தகவல் கிடைத்ததாகவும், டென் அவென்யூ பகுதியில் ஆண் ஒருவர் பேச்சுமூச்சின்றி காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்ட விசாரணையில் Bexley பகுதியில் இருந்து மாயமான 14 வயது பாடசாலை மாணவன் ஜேமி டேனியல் எனவும் உறுதி செய்யப்பட்டுள்ளது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.