மூத்த குடிமக்களுக்கு வழங்கி வந்த டிக்கெட் சலுகையை நிறுத்தியதன் மூலம் இந்திய ரயில்வே, ஆயிரத்து 500 கோடி ரூபாயை கூடுதல் வருவாயாக ஈட்டியது.
கொரோனாவால் ஏற்பட்ட வருவாய் இழப்பை ஈடுகெட்ட கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் மூத்த குடிமக்களுக்கான டிக்கெட் சலுகையை இந்திய ரயில்வே நிறுத்தியது.
மூத்த குடிமக்களுக்கான டிக்கெட் சலுகையை நிறுத்தியதன் மூலம் ஆயிரத்து 500 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைத்ததாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு இந்திய ரயில்வே பதிலளித்துள்ளது.