தாம்பரம்: தாம்பரம் அடுத்த மறைமலைநகர் பகுதியை சேர்ந்தவர் ஜேசுரன்துரை (18). குரோம்பேட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.சி.ஏ முதலாமாண்டு படித்து வந்தார். இவர், நேற்று காலை ரயிலில் கல்லூரிக்கு புறப்பட்டார். கூட்டம் அதிகமாக இருந்ததால், படியில் தொங்கியபடி பயணம் செய்தபோது, எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்ததில், பரிதாபமாக உயிரிழந்தார்.