ரஷ்யாவை விட்டு முழுவதுமாக வெளியேற உள்ளதாக மெக்டொனால்ட்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
30ஆண்டுகளுக்கும் மேலாக ரஷ்யாவில் கிளைகளை நிறுவி வருவாய் ஈட்டி வந்த மெக்டொனால்ட்ஸ் நிறுவனம் திடீரென இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
உக்ரைன் மீதான போரை கண்டித்து ரஷ்யாவில் உள்ள தனது 850 கிளைகள மூடிய மெக்டொனால்ட், தற்போது அனைத்து கிளைகளையும் உள்ளூர் முதலிட்டாளர்களிடம் விற்க முயன்று வருவதாக அறிவித்துள்ளது.
நிறுவனம் கைமாறும் வரை 62 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.