ரெனால்ட் கார் நிறுவனம் தங்களது ரஷ்யாவின் அவ்டோவாஸ் இருந்த பெரும்பாலான பங்குகளை 6 வருடங்களுக்குப் பிறகு திரும்ப வாங்கிக்கொள்வதாக உறுதியளித்து 1 ரூபாய்க்கு விற்றுள்ளது.
ரஷ்யா – உக்ரைன் இடையிலான போர் காரணமாக, ரஷ்யாவிலிருந்து பல நிறுவனங்கள் தொடர்ந்து வெளியேறி வருகின்றன. அந்நாட்டவர்களே ரஷ்யாவின் இந்த போர் முடிவை எடுத்து போராட்டங்களை நடத்தி வருகின்றன.
கார், பைக் விலை எல்லாம் அதிகரிக்க போகுதா.. டாடா மோட்டார்ஸ், ஹோண்டா, ரெனால்ட் சொல்வதென்ன?
ரெனால்ட்
ஃப்ரெஞ்ச் கார் தயாரிப்பு நிறுவனமான ரெனால்ட், ரஷ்யாவின் அவ்டோவாஸ் கார் நிறுவனத்தில் தங்களுக்கு இருந்து 67.69 சதவீத பங்கை ரஷ்ய மத்திய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆட்டோமொபைல் மற்றும் எஞ்சின் நிறுவனத்துக்கு விற்பதாகத் திங்கட்கிழமை அறிவித்தது.
நிபந்தனை விதிக்கப்பட்டதா?
மேலும் இந்த பரிவர்த்தனைகளைச் செய்வதில் எந்த நிபந்தனைகளும் விதிக்கப்படவில்லை. தேவையான அனைத்து ஒப்புதல்களும் ஏற்கனவே பெறப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரெனால்ட் நிறுவனத்துக்கு அவ்டோவாஸ் நிறுவனத்திலிருந்த பங்குகளின் விலை ஒன்று 1.20 பைசாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர்.
ரெனால்ட் ரஷ்யா மதிப்பு
சென்ற ஆண்டு ரெனால்ட் ரஷ்யாவின் மதிப்பு 2.29 பில்லியன் டாலர் என மதிப்பிடப்பட்டு இருந்தது.
தொழிற்சாலை மூடப்பட்டால் 45 ஆயிரம் பணியாளர்களின் வேலைவாய்ப்பு பறிபோகும் என்ற காரணத்துக்காக ரெனால்ட்டுக்கு இருந்த அவ்டோவாஸ் பங்குகளை ரஷ்ய மத்திய ஆராய்ச்சி மேம்பாட்டு ஆட்டோமொபைல் எஞ்சின் நிறுவனம் வாக்கிக்கொண்டுள்ளது.
ரெனால்ட் டஸ்டர்
ரெனால்ட் ரஷ்யாவிலிருந்து வெளியேறினாலும் அவ்டோவாஸ் தொழிற்சாலை ரெனால்ட் டஸ்டர் கார்கள லேடா என பிராண்டின் கீழ் தாரிக்கும் எனவே ரஷ்ய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது. போர் முடிந்த பிரகு ஃப்ரெஞ்ச் கார் நிறுவனங்கள் ரஷ்யாவிற்கு திரும்ப வருவார்கள் என நம்பிக்கையுடன் நாங்கள் இருப்பதாகவும் ரஷ்ய அரசு தரப்பு தெரிவித்துள்ளது.
ரஷ்யா நம்பிக்கை
ரஷ்யா உக்ரைன் மீது போர் செய்ய தொடங்கிய பிறகு, ரஷ்யாவிலிருந்து 400-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் வெளியேறியுள்ளன. இதனால் பலர் வேலைவாய்ப்பை இழந்துள்ளதாகவும், நிறுவனங்கள் தங்களது முதலீடுகளை இழந்துள்ளதாகவும் கூறுகின்றனர்.
இந்தியாவில் ரெனால்ட்
ரெனால்ட் நிறுவனம் இந்தியாவில் கிவிட், கைகர், ட்ரைபர், டஸ்டர் உள்ளிட்ட பல்வேறு கார் மாடல்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. நிசான் நிறுவனத்துடன் இணைந்து டேடசன் கார் நிறுவனத்தையும் இயக்கி வருகிறது ரெனால்ட்.
Renault Sells Russia Business For 1 Ruble To Govt-Backed Entity
Renault Sells Russia Business For 1 Ruble To Govt-Backed Entity | ரஷ்யா தொழிற்சாலையை 1 ரூபாய்க்கு விற்ற ரெனால்ட்.. என்ன காரணம்?