ரஷ்ய உளவுத்துறையில் வெடித்த போர்: ஏமாந்த புடினால் முற்றாக சிதையும் உக்ரைன்


உக்ரைன் மீதான படையெடுப்புக்கு விளாடிமிர் புடினை தூண்டிவிட்ட ரஷ்ய உளவுத்துறையில் தற்போது பழிபோடும் போர் வெடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஷ்ய உளவுத்துறையின் 5th Service என்ற அமைப்பின் மீதே முழு குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது.
அவர்கள் திரட்டிய தகவல் விளாடிமிர் புடினை தவறான முடிவெடுக்க தூண்டியதாகவும்,

இதனால் போர் தொடர்பில் சரியான முடிவெடுக்க தெரியாத நபர் என்ற பழியை விளாடிமிர் புடின் ஏற்க நேர்ந்ததாகவும் கூறப்படுகிறது.

ரஷ்ய உளவுத்துறையில் வெடித்த போர்: ஏமாந்த புடினால் முற்றாக சிதையும் உக்ரைன்

இந்த நிலையில், 5th Service என்ற அமைப்பின் தலைவர் தளபதி Sergei Beseda மற்றும் அவரது துணை தளபதி Anatoly Bolyukh ஆகிய இருவரும் ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டு வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர் அல்லது விசாரணைக்கு முந்தைய காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

5th Service என்பது ரஷ்யாவின் வெளிநாடுகளில் உளவு பார்க்கும் அமைப்பாகும்.
இவர்களே உக்ரைன் தலைவர்களின் கொலைப்பட்டியலையும் தயார் செய்தவர்கள்.

ரஷ்ய உளவுத்துறையில் வெடித்த போர்: ஏமாந்த புடினால் முற்றாக சிதையும் உக்ரைன்

போதுமான தரவுகளை உக்ரைனில் திரட்டப்படவில்லை எனவும், இதனாலையே ரஷ்யா கடுமையான பின்னடைவுகளை எதிர்கொண்டதாகவும்,
தலைநகர் கீவ் நகரை நெருங்க முடியாமல், திட்டத்தை கைவிட நேர்ந்ததுடன், மூன்று மாதமாக போராடி இறுதியில் உருக்குலைந்த மரியுபோல் நகரை மட்டுமே தங்கள் கைவசம் கொண்டுவர முடிந்தது எனவும் தெரியவந்துள்ளது.

உக்ரைனில் உண்மையான தரவுகளை திரட்டாமல், தளபதி Sergei Beseda குழு தவறிழைத்ததாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் பிராந்தியங்கள் அரசாங்கத்துடன் எவ்வித தொடர்பும் இல்லாதவை எனவும், இதனால் ரஷ்யா மீது அவர்கள் ஆதரவை காட்டுவார்கள் எனவும் அறிக்கை அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

ரஷ்ய உளவுத்துறையில் வெடித்த போர்: ஏமாந்த புடினால் முற்றாக சிதையும் உக்ரைன்

இதனாலையே, தலைநகர் கீவ்வை கைப்பற்ற 5 நாட்களையும், துறைமுக நகரமான மரியுபோலை கைப்பற்ற 3 நாட்களையும் ஒதுக்கியுள்ளார் விளாடிமிர் புடின்.
ஆனால் நீண்ட மூன்று மாதங்கள் போராடிய பின்னரே மரியுபோல் நகரம் உருக்குலைந்து சின்னாபின்னமாக கைப்பற்றப்பட்டுள்ளது.

மட்டுமின்றி, உக்ரைனில் கைப்பற்றப்படும் பகுதிகளுக்கு பொறுப்பேற்கும் திட்டங்களும் ரஷ்ய உளவுத்துறை அதிகாரிகளிடம் இருந்தது எனவும், அதனாலையே ரஷ்யாவுக்கு சாதகமான தகவல்களை மட்டுமே புடினிடம் அளித்ததாகவும் கூறப்படுகிறது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.