மும்பை:
ஐபிஎல் 15வது சீசனின் 65-வது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு தொடங்கியது. இதில் மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் ஆடியது. தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா 9 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய ராகுல் திரிபாதி பிரியம் கார்குடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அதிரடியாக ஆடியது.
பிரியம் கார்க் 26 பந்தில் 2 சிக்சர், 4 பவுண்டரியுடன் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அவரை தொடர்ந்து இறங்கிய நிகோலஸ் பூரன், திரிபாதியுடன் ஜோடி சேர்ந்து மும்பை பந்துவீச்சை பதம் பார்த்தார். சிறப்பாக ஆடிய ராகுல் திரிபாதி அரை சதம் கடந்தார். நிகோலஸ் பூரன் 22 பந்தில் 3 சிக்சர், 2 பவுண்டரியுடன் 38 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
அதிரடியாக ஆடிய ராகுல் திரிபாதி 44 பந்துகளில் 3 சிக்சர், 9 பவுண்டரியுடன் 76 ரன்களை குவித்து அவுட்டானர்.
இறுதியில், ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 193 ரன்களை குவித்தது.
மும்பை அணி சார்பில் ரமன்தீப் சிங் 3 விக்கெட்கள் கைப்பற்றி அசத்தினார். இதையடுத்து, 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்குகிறது.