திண்டுக்கல் அருகே வீட்டில் மான் கொம்புகள், தோல், நரிப்பற்களை வைத்திருந்த ஜோதிடர் கைது செய்யப்பட்டார்.
ரகசிய தகவலின் பேரில், ரெட்டிய பட்டியில் வீடுகளை சோதனையிட்ட வனத்துறை அதிகாரிகள் ஒரு வீட்டில் மான் தோல், மான் பற்கள், நரிப்பற்கள், ஆமை ஓடுகள், காட்டுப்பன்றி மண்டை ஓடுகள் இருப்பதை கண்டுபிடித்தனர்.
அவற்றை பறிமுதல் செய்து வீட்டில் இருந்தவரை பிடித்து விசாரித்ததில் அவர், பாரதிபுரத்தை சேர்ந்த சுந்தரமூர்த்தி என்பதும், ரெட்டியபட்டியில் வீடு எடுத்து ஜோசியம் பார்த்து வந்ததும் தெரியவந்தையடுத்து அவரை கைது செய்தனர்.