இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் தினமும் பல ஆப்டிகல் இலுசியன் படங்கள் வைரலாகி வருகிறது. சமூக ஊடகங்களில் ஆப்டிகல் இலுசியன் படங்கள் வைரலாகும் காலம் இது என்று கருதும் அளவுக்கு தற்போது அதிக அளவு ஆப்டிகல் இலுசியன் படங்கள் வெளியாகி வருகின்றன. அத்தகைய படங்கள் அதிக எண்ணிக்கையில் வெளியானாலும் எல்லா படங்களும் கவனிக்க வைக்கின்றன. அதுதான், ஆப்டிகல் இலுசியன் படங்களின் மிகப்பெரிய பலம்.
இந்த ஆப்டிகல் இலுசியன் படங்கள் கண்ணுக்கும் மூளைக்கு வேலை தருகிற, வெறுமனே ஒரு பொழுது போக்கு புதிர் விளையாட்டாக மட்டுமில்லாமல், ஆளுமையை குறிப்பிடுபவையாகவும் உள்ளன. சில படங்கள் பார்த்ததும் நிஜயமாகவே நம்மை ஆச்சரியப்பட செய்பவையாக உள்ளன. அத்தகைய படம்தான் இது. ஒரே படம்தான், ஆனால், லைட்டிங்கில் இரண்டு செட் செஸ் காய்களைக் காட்டுகின்றன.
ட்விட்டரில் அறிவியல் பத்திரிக்கையாளர் டாம் சிவர்ஸால் வெளியிட்டுள்ள இந்த படம் வைரலாகியுள்ளது. இந்த படத்தின் ட்வீட்டுக்கு 2,000 க்கும் மேற்பட்டோர் விருப்பக் குறி இட்டுள்ளனர்.
இந்த படம் உண்மையில் ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களான பார்டன் ஆண்டர்சன் மற்றும் இப்போது நியூயார்க் பல்கலைக்கழகத்தில் இருக்கும் ஜொனாதன் வினாவர் ஆகியோரால் நேச்சர் இதழில் வெளியிடப்பட்ட 2005 ஆம் ஆண்டு ஆய்வுக்காக உருவாக்கப்பட்டது.
ஒளி மூலம் மாயாஜாலம் காட்டும் இந்த படம், ஒரு புகைமூட்டமான சூழலில் கறுப்பு மற்றும் வெள்ளை என இரண்டு செட் செஸ் காய்களைக் காட்டுகிறது. ஒரே படம் வெள்ளைக் காய்களும் கறுப்பு காய்களும் தெரிகிறது.
இந்த படத்தை பார்க்கும்போது, வெள்ளை நிறத் செஸ் காய்களை பெரும்பாலும் கறுப்புப் புகைமூட்ட சூழலில் வைத்து காட்டுகிறது. கறுப்பு நிறத் காய்கள் பெரும்பாலும் லேசான வெள்ளை புகை மூட்ட சூழலில் வைத்துக் காட்டுகிறது.
கறுப்பு மற்றும் வெள்ளை என இரண்டு செட் செஸ் சதுரங்கக் காய்களும் வித்தியாசமாகத் தோன்றினாலும், உண்மை என்னவென்றால், அவை உண்மையில் ஒரே மாதிரியானவை. ஒவ்வொரு காயும் அதற்குக் கீழே உள்ளதைப் போலவே இருக்கும். அவைகள் வித்தியாசமாகத் தெரிவது ஒரு மாயைதான். இது ஒரு ஒளி மாயை.
ஆனால், டாம் சிவர்ஸ் மேலேயும் கீழேயும் இருக்கும் இரண்டு செட் செஸ் காய்களும் ஒரே வண்ணத்திலானதுதான் கூறியுள்ளார். ஆனால், சிலர், இது ஆச்சரியத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்துவதாக உள்ளது என்று கூறுகின்றனர்.
இந்த ஆப்டிகல் இலுசியன் வைரல் போட்டோ வைப் பாருங்கள். உங்களுக்கும் 2 கலரா தெரியும். ஆனால், உண்மையில், இரண்டு செட் காய்களும் ஒரே கலர்தான். இரண்டு செட் செஸ் காய்களும் ஒன்றுதான். ஆச்சரியமாக இருக்கும் பாருங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“