தமிழகம் முழுவதிலும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று கணக்குப் பரீட்சை நடந்தது. தேர்வு துவங்குவதற்கு முன் நாமக்கல் மாவட்டத்தில் தேர்வு துறை இணை இயக்குனர் பொன் குமார் தலைமையில் மாவட்ட தேர்வு மையங்களுக்கு பறக்கும் படையினர் சென்று மாணவர்களை பரிசோதித்தனர்.
அப்படி பரிசோதிக்கயில் கொல்லிமலை பகுதியில் இருக்கும் தேர்வு மையங்களில் 10க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் மைக்ரோ பிட் பேப்பர்களை வைத்திருந்தனர். அதுபோல பள்ளிபாளையத்தில் மூன்று பேரும், குமாரபாளையத்தில் 20 பேரும் சிக்கியுள்ளனர்.
இவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட மைக்ரோசாப்ட் பிட் பேப்பர்கள் சுமார் ஒரு கிலோ எடை கொண்டதாக இருக்கின்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மாணவர்களுக்கு இப்படி மைக்ரோ ஜெராக்ஸ் எடுத்துக் கொடுத்த கடையின் உரிமையாளரிடம் சென்று தேர்வுத் துறை விசாரணை மேற்கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.