எலான் மஸ்க், ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவது தொடர்பாக மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ட்விட்டரில் போலி கணக்குகள் அதிகமாக இருப்பதாக குற்றச்சாட்டிய எலான் மஸ்க், அதன் விலையை குறைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.
இந்த அறிவிப்பு காரணமாக ட்விட்டர் நிறுவனத்தின் பங்குகள் சுமார் 8.2% மேல் சரிந்துள்ளது. கடந்த ஒரு வாரமாக, ட்விட்டரில் உலாவும் போலி கணக்குகள் குறித்து எலான் மஸ்க் அதிருப்தி தெரிவித்து வருகிறார்.
மியாமி தொழில்நுட்ப மாநாட்டில் திங்களன்று பேசிய மஸ்க், ஒட்டுமொத்த ட்விட்டர் கணக்குகளில் குறைந்தது 20% போலி பயனர்கள் உள்ளனர். இது குறைவான எண்ணிக்கையாக கூட இருக்கலாம். போலி பயனர்கள் 90 சதவீதம் வரை இருப்பதற்கான சாத்தியங்கள் இருப்பதாக கூறினார். தற்போது, போலி கணக்குகளை கண்டறிவதற்கான வழிகள் என்னிடம் இல்லை. இது மனித ஆன்மாவை போலவே அறிய முடியாதவை என்றார்.
ஆனால், எலான் மஸ்க் கூற்றை ட்விட்டர் மறுத்துள்ளது. சான் பிரான்சிஸ்கோ நிறுவனம் வெளியிட்ட காலாண்டு அறிக்கையில், ட்விட்டரில் 5 சதவீதத்திற்கு குறைவாகவே போலி பயனர்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
எலான் மஸ்க் கடந்த வாரம், ட்விட்டர் தளத்தில் எத்தனை ஸ்பேம் மற்றும் போலி கணக்குகள் உள்ளன என்பது பற்றிய விவரங்கள் தெரியாததால், அதனை வாங்கும் டீல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவித்திருந்தார். வார இறுதியில், 100 பயனர் கணக்குகளின் மாதிரியை உபயோகித்து, ட்விட்டர் தளத்தைப் பற்றி சொந்தமாக பகுப்பாய்வு செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதற்கிடையில், ட்விட்டரின் சட்டக் குழு, நிறுவனத்தின் வழிமுறைகளை பகிரங்கமாகப் பகிர்ந்ததன் மூலம் வெளிப்படுத்தாத ஒப்பந்தத்தை மீறியதாக எலான் மீது புகார் செய்துள்ளதாக கூறினார்
இந்நிலையில், எலான் மஸ்க் தெரிவித்த கருத்துக்களுக்கு ட்விட்டர் தலைமை செயல் அதிகாரி பராக் அகர்வால் பதில் அளித்துள்ளார். அவர், ஒவ்வொரு காலாண்டிலும் ஆயிரக்கணக்கான கணக்குகளை செக் செய்து, அதில் எவை ஸ்பேம் என்பதை ட்விட்டர் கண்டறிகிறது. பயனர்கள் தனியுரிமை காரணமாக, இந்த பிராசஸை வெளியே உள்ள நபர்களால் நடத்திட முடியாது என தெரிவித்தார்.
இதற்கு எலான் மஸ்க் ச்சீ ஸ்மைலி அனுப்பியதால் ட்விட்டர் தளம் பரப்பரப்பாக காணப்பட்டது. ட்விட்டர் ஏன் பயனர்களை அடையாளத்தைச் சரிபார்க்க கேள்வி கேட்கவில்லை என குறிப்பிட்ட அவர், விளம்பரதாரர்கள் தங்கள் பணத்திற்கு என்ன பெறுகிறார்கள் என்பதை எப்படி தான் அறிவார்கள்? இது ட்விட்டரின் நிதி நிலைக்கு அடிப்படையான ஒன்று என கருத்து தெரிவித்தார்.
50 வயதான பில்லியனர் ஜனவரியில் ட்விட்டர் பங்குகளை வாங்கும் முயற்சியில் ஈடுபட்டார். ஏப்ரல் 4 அன்று நிறுவனத்தில் 9.2% பங்குகளை வெளியிட்டார். பின்னர் ஏப்ரல் 25 அன்று ட்விட்டரை 44 பில்லியன் டாலருக்கு வாங்குவதாக அறிவித்தார். ட்விட்டர் டீல் ஒப்பந்தமாகி ஒரு மாதம் ஆகியுள்ள நிலையில், அதன் பங்குசந்தை வீழ்ச்சியும், போலி கணக்குகள் இருப்புகள் காரணமாகவும் விலை முடிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.