PM Modi to launch 5G testbed on May 17: ஸ்டார்ட்அப்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை உள்நாட்டிலேயே சோதனை செய்து சரிபார்க்கவும் மற்றும் வெளிநாட்டு வசதிகளைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவும் நாட்டின் முதல் 5ஜி சோதனை வசதியை பிரதமர் நரேந்திர மோடி மே 17 அன்று திறந்து வைத்தார்.
சுமார் ரூ.220 கோடி செலவில் 5ஜி சோதனை வசதி அமைக்கப்பட்டுள்ளது. சோதனை வசதி என்பது புதிய தொழில்நுட்பங்களை பரிசோதிப்பதற்கான உபகரணம் ஆகும்.
ஐஐடி மெட்ராஸ் தலைமையிலான எட்டு நிறுவனங்களால் 5ஜி சோதனை வசதி பல நிறுவன கூட்டுத் திட்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. திட்டத்தில் உள்ள மற்ற நிறுவனங்கள், ஐஐடி டெல்லி, ஐஐடி ஹைதராபாத், ஐஐடி பாம்பே, ஐஐடி கான்பூர், ஐஐஎஸ்சி பெங்களூர், சொசைட்டி ஃபார் அப்ளைடு மைக்ரோவேவ் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் & ரிசர்ச் (சமீர்) மற்றும் வயர்லெஸ் டெக்னாலஜியில் சிறந்து விளங்கும் மையம் (CEWiT) ஆகியவை ஆகும்.
இந்தியாவில் இதற்கு முன், 5G சோதனை வசதி இல்லாத நிலையில், ஸ்டார்ட்அப்கள் மற்றும் பிற தொழில்துறை நிறுவனங்கள் வெளிநாடுகளுக்குச் சென்று தங்கள் தயாரிப்புகளை 5G நெட்வொர்க்கில் நிறுவுவதற்காக சோதனை செய்து சரிபார்க்க வேண்டியிருந்தது. தற்போது இந்த வசதி இந்தியாவிலேயே தொடங்கப்பட்டுள்ளது. இந்த 5ஜி சோதனை வசதி 5 வெவ்வேறு இடங்களில் கிடைக்கும்.
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (டிராய்) வெள்ளி விழா கொண்டாட்டத்தில் பேசிய பிரதமர், 5ஜி சோதனைப் வசதியானது முக்கியமான மற்றும் நவீன தொழில்நுட்பங்களின் திசையில் தன்னிறைவுக்கான ஒரு முக்கியமான படியாகும் என்று கூறினார்.
மேலும், 5G தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்கான சோதனை வசதியைப் பயன்படுத்திக்கொள்ள இளைஞர் நண்பர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் நிறுவனங்களை நான் அழைக்கிறேன். பத்தாண்டுக்குள் அதிவேக இணைய இணைப்பை வழங்கும் 6G தொலைத்தொடர்பு வலையமைப்பை இந்தியா இலக்காகக் கொண்டுள்ளது. இந்தியாவில் தற்போது 3ஜி மற்றும் 4ஜி தொலைத்தொடர்பு நெட்வொர்க்குகள் உள்ளன, மேலும் நிறுவனங்கள் 5ஜியை அறிமுகப்படுத்த தயாராகி வருகின்றன. 5ஜி நெட்வொர்க் வெளியீடு இந்திய பொருளாதாரத்திற்கு 450 பில்லியன் டாலர்களை சேர்க்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
5ஜி சேவையானது இணைய வேகத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல், வளர்ச்சியின் வேகத்தை அதிகரிக்கும். வேலைவாய்ப்புகளை உருவாக்கும். 5G தொழில்நுட்பம் நாட்டின் நிர்வாகத்தில் நேர்மறையான மாற்றத்தை கொண்டு வரும், வாழ்க்கையை எளிதாக்கும் மற்றும் எளிதாக வணிகம் செய்ய உதவும். 5ஜி சேவையானது, விவசாயம், சுகாதாரம், கல்வி, உள்கட்டமைப்பு மற்றும் தளவாடங்களில் வளர்ச்சியை அதிகரிக்கும். 5ஜி இணைப்பு, 21 ஆம் நூற்றாண்டில் நாட்டின் முன்னேற்றத்தை தீர்மானிக்கும். எனவே நவீன கால உள்கட்டமைப்புகளை விரிவுபடுத்த வேண்டும் என்று கூறினார்.
அடுத்ததாக, முந்தைய காங்கிரஸ் தலைமையிலான UPA அரசாங்கத்தைப் பற்றிப் பேசிய மோடி, 2G சேவை கொள்கை முடக்கம் மற்றும் ஊழலின் அடையாளம் என்று கூறினார்.
இதையும் படியுங்கள்: சிந்தாந்தம் இல்லாமல் எப்படி கட்சி நடத்த முடியும்? ராகுலுக்கு மாநிலக் கட்சிகள் எதிர்ப்பு
மேலும், ”தனது அரசாங்கத்தின் கீழ் நாடு, 4G க்கு வெளிப்படையாக நகர்ந்துள்ளது, இப்போது 5G க்கு செல்கிறது மற்றும் இந்த மாற்றத்தில் TRAI மிக முக்கியமான பங்கைக் கொண்டுள்ளது. பின்னோக்கி வரி அல்லது சரிப்படுத்தப்பட்ட மொத்த வருவாய் போன்ற சவால்களை தொழில்துறை எதிர்கொள்ளும் போதெல்லாம், நெருக்கடிக்கு விரைவாக பதிலளித்து, தேவையான இடங்களில் சீர்திருத்தங்களை தனது அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. இந்த முயற்சிகள் புதிய நம்பிக்கையை உருவாக்கியுள்ளன. இதன் விளைவாக, கடந்த 8 ஆண்டுகளில் தொலைத்தொடர்பு துறையில் 2014-க்கு முன் நாட்டிற்கு வந்த தொகையை விட ஒன்றரை மடங்கு அதிகமாக அந்நிய நேரடி முதலீடு வந்துள்ளது” என்றும் மோடி கூறினார்.