ரூ. 25 கோடி பச்சைக்கல் லிங்கம் மீட்பு – 2 பேர் கைது
சென்னை பூந்தமல்லி அருகே ரூ.25 கோடி மதிப்புடைய பச்சைக்கல் லிங்கத்தை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினர் கைப்பற்றி உள்ளனர்
பச்சைக்கல் லிங்கத்தை விற்க முயன்ற பாலா, பாக்கியராஜ் என்ற 2 பேரை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினர் கைது செய்தனர்
9 கிலோ எடைகொண்ட பச்சைக்கல் லிங்கத்தின் உயரம் 7 செ.மீ , சுற்றளவு18 செ.மீ ஆகும்
பச்சைக்கல் லிங்கத்தை தாங்கி நிற்கும் நாகாபரணம், கருடன் உருவத்துடன் பொறிக்கப்பட்டுள்ளது
கைப்பற்றப்பட்டுள்ள பச்சைக்கல் லிங்கத்தை தாங்கி நிற்கும் நாகாபரணம் சிலை 500 ஆண்டுகள் பழமையானது