நடிகர்கள் ஆதி மற்றும் நிக்கி கல்ராணியின் திருமணத்தையொட்டி, நேற்றிரவு மெஹந்தி விழா நடைபெற்றது.
தமிழில் ‘மிருகம்’, ‘அரவான்’, ‘ஈரம்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ஆதி. இதேபோல், தமிழில் ஜிவி பிரகாஷின் ‘டார்லிங்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நிக்கி கல்ராணி. இவர்கள் இருவரும் சேர்ந்து ‘மரகத நாணயம்’ மற்றும் ‘யாகாவாராயினும் நா காக்க’ ஆகிய இரண்டு படங்களில் நடித்திருந்தனர். இதையடுத்து இவர்கள் இருவரும் காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் செய்துக்கொள்ளப் போவதாகவும் தகவல்கள் வெளியாகின.
இதையடுத்து கடந்த மார்ச் மாதம் 24-ம் தேதி தங்களுக்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக நிக்கி கல்ராணி மற்றும் ஆதி, தங்களது சமூகவலைத்தள பக்கங்களில், தங்களின் நிச்சயார்த்த புகைப்படங்களை கடந்த மார்ச் மாதம் 26-ம் தேதி பகிர்ந்தனர். இவர்களின் திருமணத்தையொட்டி, கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஹைதராபாத்தில் ‘ஏ.கே.61’ படப்பிடிப்பில் நடிகர் அஜித்தை நேரடியாக சந்தித்து நடிகர் ஆதி திருமண அழைப்பிதழை கொடுத்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து இவர்களின் திருமணம் இன்று சென்னையில் பிரபல ஓட்டல் ஒன்றில் நன்பர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் நடைபெற்று வருகிறது. முன்னதாக நேற்றிரவு நிக்கி கல்ராணி, ஆதியின் மெஹந்தி விழா, நிக்கி கல்ராணியின் வீட்டில் நடைபெற்றது. இந்த விழாவில், இருவரும் அஜித்தின் ‘ஆலுமா, டோலுமா’ பாடலுக்கு நடிகர்கள் நானி, சந்தீப் கிஷன் ஆகியோருடன் இணைந்து நடனமாடினர். மேலும் இவர்களது மெஹந்தி விழாவில் நடிகர்கள் ஆர்யா, சாயிஷா, ‘மெட்ரோ’ பட நடிகர் ஷிரிஷ் ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் நடிகர் மெட்ரோ ஷிரிஷ் அவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.