க்னோ:
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ஸ்ரீராமருக்கு கோயில் கட்டும் பணிகள் கடந்த பிப்ரவரி மாதம் துவங்கியது. இந்நிலையில் கோயில் கட்டுமானக் குழு கமிட்டியின் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ராமர் கோயிலில் கிரானைட் கற்கள் கொண்டு பீடம் கட்டும் பணி பிப்ரவரி மாதம் துவங்கியது. ஆகஸ்ட் மாதத்திற்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பீடம் கட்ட, சுமார் 17,000 கற்கள் பயன்படுத்தப்படும். கர்நாடகா மற்றும் ஆந்திராவில் இருந்து கற்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன.
ரெயில்வே அமைச்சகத்தின் கீழ் இயங்கும் கன்டெய்னர் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா, அயோத்திக்கு கிரானைட் கற்களை கொண்டு செல்வதற்கு உதவுகிறது.
மூன்று அடுக்குகளைக் கொண்ட கோவிலின் பணிகள், திட்டமிட்டபடி நடந்து வருகின்றன. கருவறைக்கான பீடம் முடியும் தருவாயில் உள்ளது. கீழ்தளத்தில் கோயில் கருவறை டிசம்பர் 2023க்குள் கட்டி முடிக்கப்படும். மீதமுள்ள பணிகள் டிசம்பர் 2024 க்குள் முடிவடையும்.
கோயில் அடித்தளம் மற்றும் தூண்கள் அமைக்கும் பணிகள் முடிந்ததும், கோபுரம் அமைக்கும் பணிகள் தொடங்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, அயோத்தியில் பிரம்மாண்டமான ராமர் கோயில் கட்டுவதற்கான செலவு ரூ.300 முதல் ரூ.400 கோடி வரை ஆகலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. அங்குள்ள மொத்த 70 ஏக்கர் நிலத்தின் வளர்ச்சிக்கான செலவு ரூ.1100 கோடியைத் தாண்டும் என்று ராம் ஜென்மபூமி டிரஸ்ட் பொருளாளர் சுவாமி கோவிந்த் தேவ் கிரி மகராஜ் தெரிவித்தார்.
கோயில் கட்ட பொதுமக்களிடம் நிதி திரட்டியதன் மூலம் ரூ.2,100 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாகவும் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
இதையும் படியுங்கள்…
டெல்லி துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் திடீர் ராஜினாமா