அரசு ஊழியர்களுக்கு ஊதியம் தருவதற்காக ரூபாய் நோட்டுகளை (கரன்சி) அச்சடிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக, இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்து உள்ளார்.
அண்டை நாடான இலங்கையில், கடும் பொருளாதார நெருக்கடிகளுக்கு இடையே, பிரதமர் பதவியை, மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்தார். எனினும் ராஜபக்சே குடும்பத்தினருக்கு எதிராக இலங்கையில் பொது மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கிடையே இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கேவை நியமனம் செய்து அதிபர் கோத்தபய ராஜபக்சே உத்தரவு பிறப்பித்தார்.
இந்நிலையில், இலங்கையின் புதிய பிரதமராக பொறுப்பேற்ற ரணில் விக்ரமசிங்கே, தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
இலங்கை அரசுக்கு சொந்தமான
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்
தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வருகிறது. மார்ச் 2021 நிலவரப்படி 4,500 கோடி டாலர் நஷ்டத்தை சந்தித்தது. விமானத்தில் பயணம் செய்யாத ஏழை மக்கள், விமான நிறுவனம் எதிர்கொண்டுள்ள நஷ்டத்தை ஏற்க வேண்டிய அவசியமில்லை. இதைக் கருத்தில் கொண்டு இந்நிறுவனத்தை விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது போல அரசு ஊழியர்களுக்கு ஊதியம் தருவதற்காக ரூபாய் நோட்டுகளை (கரன்சி) அச்சடிக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.
Morbi Factory Accident: தொழிற்சாலையில் இடிந்து விழுந்த சுவர் – 12 பேர் உயிரிழப்பு!
அதேநேரம் கரன்சி புதிதாக அச்சிடுவதால் நாட்டின் நாணய மதிப்பு மேலும் சரிவடையும் என்று நிபுணர்கள் அச்சம் தெரிவித்து உள்ளனர். இலங்கையில் தற்போது ஒரு நாளைக்கு மட்டுமே போதுமான அளவில் கச்சா எண்ணெய் கையிருப்பில் உள்ளது. அரசிடம் அந்நியச் செலாவணி கையிருப்பு குறைந்த நிலையில் வெளிச்சந்தையில் டாலரை வாங்க அரசு முடிவு செய்துள்ளது. கச்சா எண்ணெயுடன் 3 கப்பல்கள் இலங்கை துறைமுகத்தில் உள்ளன. இவற்றுக்கு பணம் செலுத்தினால் மட்டுமே அவற்றை இறக்குமதி செய்ய முடியும். அதற்குத் தேவையான பணத்தை திரட்டவே நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்தார்.