விடுதலைக்கு பின்னர் முதல்முறையாக பேரறிவாளன் ஊடகத்திடம் பேசியுள்ளார்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்த பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
இந்நிலையில் விடுதலைக்கு பிறகு பேசிய பேரறிவாளன், எல்லாருக்கும் வணக்கம். அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான் கேடும் நினைக்கப்படும் என்பது குறள். “அவ்விய நெஞ்சத்தான் ஆக்கம் அப்படி என்றால், கெட்டவன் மகிழ்ச்சியாக வாழுதல். நல்லவர்கள் வீழ்ந்து போகுதல்.
இது இரண்டையும் இந்த உலகம் பார்த்து கொண்டிருக்குமாம். காரணம் இது இயற்கையின் நீதி கிடையாது. இதற்கு மாறானதுதான் இயற்கையின் நீதி. அப்படித்தான் உலகத்தில் உள்ள அனைத்து தமிழகர்களும் பார்த்தனர்.
பேரறிவாளன் விடுதலை! முடிவுக்கு வந்த 30 ஆண்டுகால சட்டப்போராட்டம்
அதற்கு காரணம் என்னுடைய அம்மா. அம்மாவின் தியாகம், அம்மாவின் போராட்டம், வேதனை வலிகளை சந்தித்து உள்ளார். அதையெல்லாம் கடந்து 31 ஆண்டு காலம் இடைவிடாது போராடியிருக்கிறார்.
இவ்வளவையும் கடந்து அதற்கான வலிமையை கொடுத்தது எங்கள் பக்கம் இருந்த நியாயம்.
இனி சுதந்திர காற்றை சுவாசிக்க போகிறேன்.அரசு, மக்களின் ஆதரவு பெருகுவதற்கு செங்கோடியின் தியாகம் தான் காரணம்.
எனக்கு வயதாக வயதாக அவர்கள் உயிருடன் இருக்கும் போதே என் விடுதலையை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கும் உண்டு என கூறினார்.
அடுத்தகட்ட வாழ்க்கைப் பயணம் என்ன? என்ற கேள்விக்கு கொஞ்சம் மூச்சு விடணும். கொஞ்சம்போல என்னை ஆசுவாசப் படுத்திக்கணும் என கூறியுள்ளார்.