இராமநாதபுரம் அருகே இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களை, மதுபோதையில் ஆயுதங்களைக் கொண்டு தாக்கிய 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.
குற்றப்பிரிவு காவலர்களான வசந்த், லிங்கநாதன் ஆகியோர் நரிப்பையூர் கடற்கரையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, அந்த கும்பல் போலீசாரை தகாத வார்த்தைகளால் திட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
அதோடு, மறைத்து வைத்திருந்த ஆயுதங்களால் போலீசாரை தாக்கியதாக சொல்லப்படுகிறது. இதில் காவலர்கள் இருவரும் காயமடைந்த(( நிலையில், தாக்குதலில் ஈடுபட்ட 6 பேரையும் கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்ற))னர்.