கொழும்பு: இலங்கையில் ஆளுங்கட்சி எம்.பி.க்கள் சனத் நிஷாந்த மற்றும் மிலன் ஜயதிலக்க உட்பட 4 பேருக்கு வரும் 25ம் தேதி வரை சிறை தண்டனை விதித்து கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 9ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தின் போது தாக்குதலில் ஈடுபட்டதாக 4 பேரும் கைது செய்யப்பட்டனர்.