இந்தியாவில் யுபிஐ பணப்பரிவர்த்தனை புரட்சியை ஏற்படுத்தி வருகிறது. யுபிஐ செயலிகள் மூலம் மொபைல் எண் மற்றும் வங்கி கணக்கை இணைத்து நிமிடத்தில் பணப்பரிமாற்றம் செய்யலாம்.
பணமதிப்பிழப்பு காலத்தில் மக்கள் இதை அதிகம் பயன்படுத்த தொடங்கினார்கள். கொரோனா காலத்தில் யுபிஐ செயலிகள் பயன்படுத்துவது மேலும் அதிகரித்தது. என்ன தான் யுபிஐ செயலிகள் மிகவும் பயனுள்ளதாக இருந்தாலும் அதன் மூலம் நடைபெறும் மோசடிகளும் அதிகரித்து வருகிறது. எனவே யுபிஐ பரிவர்த்தனையைப் பாதுகாப்பாகப் பயன்படுத்துவது எப்படி என இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.
தங்கம் வாங்க இது தான் சரியான நேரம்.. எவ்வளவு குறைஞ்சிருக்குன்னு பாருங்க!
யுபிஐ செயலிகளில் பணத்தை அனுப்பும் முன்பு இதை சரிபாக்க வேண்டும்?
யுபிஐ செயலிகள் மூலம் பணம் பரிமாற்றம் செய்யும் போது பலர் மொபைல் எண்ணை தான் படுத்துகிறார்கள். அதில் நாம் ஒரு எண்ணை தவறாக அழுத்தினாலும் தவறான நபர்களுக்கு பணம் சென்றுவிடும். எனவே மொபைல் எண் உள்ளிட்ட பிறகு வரும் பெயரை ஒருமுறை சரிபார்த்துக்கொண்டு பணம் பரிவர்த்தனை செய்ய வேண்டும். சோதனைக்காக முதல் முறை 1 ரூபாய் அனுப்பலாம். அது சரியாக சென்ற பின் முழு தொகையை அனுப்புவது நல்லது.
QR குறியீடு
இப்போது பெரும்பாலான கடைகளில் QR குறியீடு உதவியுடன் யுபிஐ செயலிகளிலிருந்து பணத்தைப் பெறுகிறார்கள். இப்படி QR குறியீட்டை ஸ்கேன் செய்த பிறகும் அது அந்த கடையினுடையது தானா என்பதை உறுதி செய்த பிறகு பணம் பரிவர்த்தனை செய்ய வேண்டும். மோசடியாளர்கள் கடையின் உரிமையாளருக்குத் தெரியாமல் QR குறியீடு ஸ்டிக்கரை மாற்றி ஒட்டிவிட்டால், மோசடியாளர்களின் வங்கி கணக்கிற்குப் பணம் செல்ல வாய்ப்புள்ளது.
யுபிஐ பின் எண்ணை யாருடனும் பகிராதீர்கள்
யுபிஐ செயலிகளிலிருந்து பணத்தை அனுப்பும் போது அதற்கு பின் எண் உள்ளிட வேண்டும். பலர் தங்களது மொபைல் போனின் பின் எண்ணையே அதற்கும் வைத்து இருப்பார்கள். மொபைல் பின் எண் வீட்டில் இருக்கும் சிறுவர்களுக்குக் கூட தெரியும். மோசடியாளர்கள் அனுப்பும் ஏதேனும் இணைப்பைச் சிறுவர்கள் கிளிக் செய்து யுபிஐ பின் எண்ணை உள்ளிட்டால் அது உங்களுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும். எனவே மொபைல் போன் மற்றும் யுபிஐ செயலிகளுக்கு வெவ்வேறு பின் எண்ணை பயன்படுத்துவது நல்லது.
திரை பூட்டு
போனில் நாம் ஒன்றுக்கு மேற்பட்ட யுபிஐ செயலிகளை பயன்படுத்தி வருகிறோம். ஒருவேலை உங்களது போன் காணாமல் போனால் அதில் உள்ள செயலிகளை அணுகி மோசடி நடைபெற வாய்ப்புள்ளது. எனவே திரைக்கு எப்போதும் பின் அல்லது பேட்டர்ன் பூட்டு போடுவது நல்லது. மேலும் யுபிஐ பின் எண் மற்றும் பிற வங்கி சார்ந்த எண்களை போனில் சேமித்து வைக்க கூடாது.
செயலிகளை குறைத்தல்
பல யுபிஐ செயலிகளை பயன்படுத்தும் போது நாம் தவறான பின் எண்ணை உள்ளிட வாய்ப்புள்ளது. அப்படி செய்யும் போது யுபிஐ செயலி லாக் ஆகி விடும். எனவே தேவைக்கு அதிகமான யுபிஐ செயலிகள் நிறுவ வேண்டாம்.
கண்டிப்பாக இதை செய்ய கூடாது?
தெரியாத மொபைல் எண்ணிலிருந்து பணம் செலுத்துமாறு அல்லது பணம் கிடைக்கும் என வரும் இணைப்புகளை கிளிக் செய்ய கூடாது. அவை உங்கள் போனை ஹேக் செய்யும் அல்லது அதன் மூலம் வங்கி கணக்கிலிருந்து பணம் போகவும் காரணமாக அமையும்.
எஸ்எம்எஸ்
யுபிஐ செயலிகளை பயன்படுத்துபவர்கள் தினமும் தங்களுக்கு வரும் எஸ்எம்எஸ்-களை செக் செய்ய வேண்டும். உங்கள் அனுமதி இல்லாமல் பரிவர்த்தனை ஏதேனும் நடந்து இருந்தால் அதை உடனே புகார் தெரிவிக்க வேண்டும்.
வாட்ஸ்அப் எண்?
டிஜிட்டல் பரிவர்த்தனை செய்யும் போது ஏற்படும் குளறுபடிகளை +91 892 891 3333 என்ற எண் மூலம், டிஜி சாத்தி சேவையை வாட்ஸ்அப் மூலம் தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம். இந்த சேவை விரைவில் பிற சமூக வலைத்தளங்களிலும் கிடைக்கும் என நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்ரேஷன் ஆப் இந்தியா கூறியுள்ளது.
இணையதளம்
டிஜி சாத்தி சேவையை www.digisaathi.info இணையதளம் சென்றும் புகார் அளிக்கலாம். மேலும் அதே இணையத்தில் உள்ள சாட் அசிஸ்டன்ஸ் சேவை உதவியுடனும் புகார் அளிக்க வழங்கப்பட்டுள்ளது.
இலவச அழைப்பு எண்
14431, 1800 891 3333 என்ற எண்களைத் தொடர்புகொண்டும் டிஜிசாத்தி சேவையில் புகார் அளிக்க முடியும். அதில் இப்போது புதிதாக +91 892 891 3333 என்ற வாட்ஸ்அப் புகார் சேவையும் இணைந்துள்ளது.
How To Use UPI Apps Safely?
How To Use UPI Apps Safely? | உங்க போனில் கூகுள் பே, போன் பே, பேடிஎம் செயலிகள் உள்ளனவா? பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி?