அதானி குழுமம் மருத்துவத் துறையில் கால்பதிக்க உள்ளதாக மே 18-ம் தேதி பங்குச்சந்தைக்குத் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அண்மையில் அதானி குழுமம் ஊடக நிறுவனம் தொடங்க உள்ளதாகவும், அதற்கு ஏஎம்ஜி நெட்வொர்க்ஸ் என பெயரிட உள்ளதாகவும் தெரிவித்து இருந்தது.
அதானி ஹெல்த் வென்ச்சர்ஸ் லிமிடெட்
அதானி குழுமத்தின் துணை நிறுவனமான அதானி ஹெல்த் வென்ச்சர்ஸ் லிமிடெட் (AHVL), மருத்துவம் மற்றும் நோயறிதல் வசதிகளை அமைத்தல் உள்ளிட்ட மருத்துவம் தொடர்பான வணிகத்தை மேற்கொள்ளும் என தெரிவித்துள்ளது.
ஆரம்பம்
அதானி ஹெல்த் வென்ச்சர்ஸ் லிமிடெட் நிறுவனம், ஆரம்ப கட்டமாக 1 லட்சம் ரூபாய் மூலதனத்தில் தொடங்கப்பட்டுள்ளது. மருத்துவ தொழில்நுட்பங்கள், நோய் கண்டறியும் கருவிகள், மருத்துவ உதவிக் கருவிகள், மருத்துவ ஆய்வு கூடங்கள் சார்ந்த வணிகங்களை அதானி ஹெல்த் வென்ச்சர்ஸ் லிமிடெட் நிறுவனம் செய்யும்.
சிமெண்ட் நிறுவனம்
இரண்டு நாட்களுக்கு முன்பு அம்புஜா சிமெண்ட் மற்றும் ஏசிசி சிமெண்ட் நிறுவனத்தை வாங்கி, இந்தியாவின் இரண்டாம் மிகப் பெரிய சிமெண்ட் உற்பத்தி நிறுவனமாக ஒரே நாளில் மாறியது.
30 நிறுவனங்கள்
2014-ம் ஆண்டிலிருந்து அதானி குழுமம் 30-க்கும் மேற்பட்ட நிறுவனங்களை வாங்கியுள்ளது. துறைமுகங்கள், விமான நிலையங்கள், மின்சாரம் என பல்வேறு துறைகளில் அதானி குழுமம் இப்போது முன்னிலையில் உள்ளது.
மருத்துவத் துறை
இந்தியாவில் மருத்துவத் துறை ஆண்டுக்கு 22 சதவீதம் வளர்ச்சியை பெற்று வருகிறது. 2022 நிதியாண்டில் மருத்துவ துறையின் மதிப்பு 372 பில்லியன் டாலர்களை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதானி குழுமம் மருத்துவத் துறையில் நுழைந்துள்ள நிலையில், அந்தத் துறையின் வளர்ச்சி எப்போதும் இல்லாத அளவிற்கு உயரும் என கூறப்படுகிறது.
விரைவில் அதானி குழுமத்திடம் இருந்து மருத்துவ துறை சார்ந்த நிறுவனத்தை வாங்குவதாக அறிவிப்பு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

Adani Group Enters Healthcare Business After Media
Adani Group Enters Healthcare Business After Media | ஊடகத் துறையைத் தொடர்ந்து மருத்துவ துறையில் களமிறங்கும் அதானி!