இந்தியாவின் பட்ஜெட் விமான போக்குவரத்து நிறுவனமான இண்டிகோ, முன்னாள் ஏர் பிரான்ஸ்-கேஎல்எம் தலைமை நிர்வாக அதிகாரி பீட்டர் எல்பர்ஸை அடுத்த தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போது இண்டிகோவின் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ள ரோனோஜாய் தத்தா 2022, செப்டம்பர் 30ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். அதனை தொடர்ந்து அக்டோபர் மாதம் முதல் பீட்டர் எல்பர்ஸ் இண்டிகோ நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பை ஏற்பார்.
424 ஊழியர்களை பணிநீக்கம்.. அதிர்ச்சி கொடுத்த பெங்களூர் ஸ்டார்ட்அப் நிறுவனம்..!
யார் இந்த பீட்டர் எல்பர்ஸ்?
இண்டிகோவின் தலைமை நிர்வாக அதிகாரியாக விரைவில் பொறுப்பேற்க உள்ள 52 வயதான பீட்டர் எல்பர்ஸ், KLM ராயல் டச்சு ஏர்லைன்ஸின் தலைவர் & தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்துள்ளார்.
1992-ம் ஆண்டு KLM ராயல் டச்சு ஏர்லைன்ஸில் பணிக்கு சேர்ந்த பீட்டர் எல்பர்ஸ், நெதர்லாந்து, ஜப்பான், கிரீஸ் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளில் பல நிர்வாகப் பதவிகளை வகித்தார். 20111-ம் ஆண்டு KLM ராயல் டச்சு ஏர்லைன்ஸின் தலைமை நிர்வாக அதிகாரியாக பதவி உயர்வு பெற்றார்.
காம்ப்பெல் வில்சன்
ஏர் இந்திய நிறுவனம் மிண்டும் டாடாவிடம் ஒப்படைத்த பிறகு துருக்கி ஏர்லைன்ஸின் மேலாண் இயக்குநரான இல்கர் அய்சி தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டார். ஆனால் பல்வேறு சர்ச்சைகளுக்குப் பிறகு அவர் அதிலிருந்து தான் விலகுவதாக அறிவித்தார். தொடர்ந்து மே 12-ம் தேதி ஏர் இந்தியாவின் புதிய தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநராக காம்ப்பெல் வில்சனை நியமித்துள்ளதாக அறிவித்தது.
விமான போக்குவரத்துத் துறையில் 26 ஆண்டுகள் அனுபவம் உள்ள காம்ப்பெல் வில்சன், குறைந்த செலவில் இயக்கப்படும் விமானங்களை நிர்வாகம் செய்வதில் கைதேர்ந்தவர் என அறிவிக்கப்பட்டது. இந்தியாவின் நம்பர் 1 விமான நிறுவனமாக உள்ள இண்டிகோவுக்கு இவரது நியமனம் பெரும் சவாலாக இருக்கும் என கூறப்படுகிறது.
சுனில் பாஸ்கரன்
ஏர் ஏசியா இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரியாக சுனில் பாஸ்கரன் உள்ளார். 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் இவர் இந்த பதவியை அலங்கரித்து வருகிறார். டாடா குழுமத்துக்கு ஏர் ஏசியாவில் 70 சதவீதத்திற்கும் அதிகமான பங்குகள் உள்ள நிலையில் ஏர் இந்தியாவில் விரைவில் இணையம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அலோக் சிங்
கொச்சியிலிருந்து செயல்பட்டு வரும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தலைமை நிர்வாக அதிகாரியாக 2020, நவம்பர் மாதம் முதல் அலோக் சிங் உள்ளார்.
அஜய் சிங்
இந்தியாவின் மூன்றாம் மிகப் பெரிய ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக அஜய் சிங் இருக்கிறார். மேலும் இவர் இந்திய குத்துச்சண்டை கூட்டமைப்பின் தலைவராகவும், இந்திய ஒலிம்பிக்கின் இணை துணைத் தலைவராகவும் உள்ளார்.
கோ ஏர்
வாடியா குழுமத்தின் கோ ஏர் நிறுவன தலைவராக கௌசிக் கோனா இருக்கிறார். 2021-ம் ஆண்டு வரை நிர்வாக இயக்குநராக ஜஹாங்கீர் வாடியா இருந்தார்.
விஸ்தரா ஏர்லைன்ஸ்
டாடா மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் இணை நிறுவனமான விஸ்தரா ஏர்லைன் தலைமை நிர்வாக அதிகாரியாக வினோத் கண்ணன் உள்ளார். இவர் விஸ்தார நிறுவனத்துக்கு முன்பாக ஸ்கூட், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களில் முக்கிய பதவிகளிலிருந்துள்ளார்.
சஞ்சிவ் கபூர்
பெரும் நிதி நெருக்கடியில் சிக்கி 2019-ம் ஆண்டு முதல் செயல்படாமல் உள்ள ஜெட் ஏர்வேஸ் விரையில் தங்களது சேவையை மீண்டும் தொடங்க உள்ளது. இந்நிலையில் ஏப்ரல் மாதம் ம்னுதல் ஜெட் ஏர்வேஸ் தலைமை நிர்வாக பொறுப்பை சஞ்சிவ் குமார் உள்ளார்.
ட்ரூ ஜெட்
உள்நாட்டு விமான சேவை நிறுவனமான ட்ரூ ஜெட்டின் நிறுவனரும், நடிகருமான ராம் சரன் இந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார்.
IndiGo Names Pieter Elbers As New CEO; How About Other Indian Airlines CEO’s?
IndiGo Names Pieter Elbers As New CEO; How About Other Indian Airlines CEO’s? | ஏர் இந்தியாவை தொடர்ந்து இண்டிலோவிலும் புதிய சி.ஈ.ஓ..!