ஓடிடியில் வெளியாகும் அசோக் செல்வன், பிரியா பவானி நடித்த ‘ஹாஸ்டல்’

அசோக் செல்வனின் ‘ஹாஸ்டல்’ திரைப்படம் ஓடிடியில் வெளியாகவுள்ளது.

அசோக் செல்வன், பிரியா பவானி நடித்த ‘ஹாஸ்டல்’ கடந்த ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கிய இப்படம் ‘அடி கப்பியாரே கூட்டமணி’ படத்தின் மலையாள ரீமேக். காமெடி கதைக்களத்தைக் கொண்டாலும் பார்வையாளர்களுக்கு சிரிப்பை வரவைக்கவில்லை என்று விமர்சனங்கள் எழுந்தன. ஆர்.ரவீந்திரன் தயாரித்துள்ள இப்படத்தில், சதீஷ், நாசர், முனீஸ்காந்த், ரவி மரியா, ராகுல், கிரிஷ், கேபிஒய் யோகி மற்றும் பலர் நடித்துள்ளார்கள். போபி சசி இசையமைத்துள்ளார். பிரவீன் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

image

இப்படத்தின், தியேட்டர் வெளியீட்டிற்குப் பிறகான டிஜிட்டல் உரிமையை சிம்ப்ளி செளத் ஓடிடி தளம் கைப்பற்றியிருந்தது. இந்த நிலையில் படம் வெளியாகி 21 நாட்களில் வரும் மே 20 ஆம் தேதி செம்ப்ளி செளத் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இதே தேதியில் ராஜமெளலின் ‘ஆர்ஆர்ஆர்’ ஜீ 5 தளத்தில் வெளியாவது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.