கண் ஆரோக்கியம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்- குடியரசு துணைத் தலைவர் வலியுறுத்தல்

ஊட்டி:
ஊட்டியில் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்ற  குடியரசு துணைத் தலைவர் வெங்கையாநாயுடு, அங்குள்ள ஆளுநர் மாளிகையிலிருந்து காணொலி காட்சி மூலம் தனியார் நிறுவன கண்விழி ஆய்வு நிறுவனத்தை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், கண் ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை அதிகப்படுத்த வேண்டும் என்றார். இதற்கான ஊடக பிரச்சாரத்தில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரமுகர்கள், ஆளுமைகளை ஈடுபடுத்தி கொள்ள வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.
பார்வை குறைபாடு என்பது தவிர்க்கபடக் கூடியதும், குணப்படுத்தக் கூடியதும் தான் என்ற தகவலை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்றார்.
ஊரக பகுதிகளில் அரசின் துணை மருத்துவ மையங்கள் திறக்கப்படும்போது அவற்றுக்கு தனியார் மருத்துவமனைகள் ஒத்துழைப்பாக இருக்க வேண்டும் என்றும்  குடியரசு துணைத்தலைவர் வலியுறுத்தினார்.
நவீன வாழ்க்கை முறைகளும் பணி தேவைகளும், சராசரி பார்வை நேரத்தை அதிகரிப்பதாகவும், மின்னணு சாதனங்களின் பயன்பாட்டை குழந்தைகளிடையே முறைப்படுத்துவது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.