கர்நாடக மாநிலம் சித்ராதுர்கா மாவட்டம் துமகூலஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர்கள் பையனா கால்நடைகளை வளர்த்து வருகிறார்.
நாள்தோறும் ஆடு மாடுகளை மேய்ச்சலுக்காக துமகூலஹள்ளி கிராமத்தின் அருகிலுள்ள மல்லாபுரம் வனப்பகுதிக்கு கால்நடைகளை அழைத்து சென்று வருவார்கள். இந்நிலையில், வழக்கம்போல ஆடு, மாடுகளை மல்லாபுரம் வனப்பகுதிக்கு மேய்ச்சலுக்கு சென்றிருந்தார். அப்போது வனப்பகுதியில் திடீரென இடி மின்னலுடன் பலத்த மழை பெய்ய தொடங்கியுள்ளது. இதை அடுத்து ஆடு மாடுகளை ஒரு மரத்தடியில் ஓட்டிச் சென்றுள்ளார்.
அப்போது எதிர்பாராதவிதமாக இடி விழுந்து அங்கிருந்த 114 செம்மறி ஆடுகள், 39 ஆடு, ஒரு பசு மாடு சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தன. தகவல் அறிந்து நூற்று கணக்கான மக்கள் வந்து இறந்த கால்நடைகளை பார்த்து சென்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM