புதுச்சேரியில், அடுக்குமாடி குடியிருப்பில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியின் போது விஷவாயு தாக்கியதில், கூலி தொழிலாளி உயிரிழந்தார்.
திருவண்டார்கோவில் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் திருபுவனையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வதற்காக சென்றிருக்கிறார்.
அவர் கழிவு நீர் தொட்டிக்குள் இறங்கிய போது விஷவாயு தாக்கி, தொட்டிக்குள்ளேயே மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது.
அங்கிருந்த நபர் ரமேஷை காப்பாற்ற முயன்றும் முடியாததால் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்துள்ளார்.
சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினர், ரமேஷை சடலமாக மீட்டனர்.