பிரான்ஸ் நாட்டின் கான்ஸ் திரைப்பட விழாவின் தொடக்க நாளில் சிவப்புக் கம்பள மரியாதையை இந்தியாவில் இருந்து சென்ற திரையுலக ஆளுமைகள் ஏற்றுக் கொண்டனர்.
மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், நடிகர்கள் கமல்ஹாசன், நவாசுதீன் சித்திக், சேகர் கபூர், மாதவன் உள்ளிட்டோருடன் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானும் சிவப்புக் கம்பள மரியாதையை ஏற்றார்.
இந்த விழா இந்தியத் திரையுலகினரை கௌரவிக்கும் வகையில் அறிவிக்கப்பட்டிருப்பதால் மிகவும் பெருமையாக உணர்வதாகக் கூறினார் ஏ.ஆர்.ரகுமான். அவர் முதன்முறையாக இயக்கிய 36 நிமிட குறும்படம் இந்த விழாவில் திரையிடப்படுகிறது.